முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகன்களை தாக்கியதாக பாடகர் மனோவின் மனைவி புகார்: 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      தமிழகம்
Mano 2024-09-20

சென்னை, தனது மகன்களை தாக்கியதாக பிரபல பின்னணி பாடகர் மனோவின் மனைவி அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சினிமா பின்னணி பாடகர் மனோவின் வீட்டின் முன்பு மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக் மற்றும் வீட்டு பணியாளர்கள் இருவர் மற்றும் 8-க்கும் மேற்பட்ட நபர்களை சேர்ந்த கும்பல்கள் தாக்கி கொண்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகின.  மேலும் செல்போன் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மையில் பாடகர் மனோவின் மகன்கள் தாக்கியதாக ஒரு தரப்பினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மனோவின் மகன்கள் மற்றும் உடன் இருந்த 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அதில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மனோவின் மகன்கள் தற்போது வரை தலைமறைவாகி உள்ளனர். வீட்டு முன் நின்றவர்களை தாக்கியதாக மனோவின் மகன்கள் மீது ஏற்கனவே காவலர்கள் வழக்கு பதிந்தனர்.

இந்த நிலையில், மனோவின் மகன்களும் எதிர்தரப்பால் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் சம்பவம் நடந்த அன்று மகன்களை தாக்கியதாகவும், தன்னையும் தாக்கியதாகவும் மனோவின் மனைவி ஜமீலா தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 8 பேர் மீது புகார் அளித்திருந்தார். 

அதன் அடிப்படையில் தற்போது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், ஆபாச வார்த்தைகள் பேசுதல், கும்பலாக சேர்ந்து தாக்குதல் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து