முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிஷ்த்வார் கலவரம் எதிரொலி: அமர்நாத் யாத்திரை ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

ஜம்மு, 12 - காஷ்மீரில் கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அம்ர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. கிஷ்த்வாரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலம் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கல் வீசினர்.  இதையடுத்து கலவரம் வெடித்தது. 2 பேர் கொல்லப்பட்டனர். இதை கண்டித்து பாஜக சார்பில் ஜம்மு பகுதியில் ஒருநாள் கடையடைப்பு நடைபெற்றது. 

  ஹரியத் மாநாடு கட்சி சார்பில் மற்றொரு பந்த் அறிவிக்கப்பட்டது.  இந்த பகுதியில் மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த 500 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். விஜய்பூர், ராஜ்போரா, உத்தம்பூர், பகுதிகளில் சாலைகளில் டயர்களை கொளுத்தினர். இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து முடங்கியது. 

பத்தார் மாவட்டத்தில் கலவரம் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்