முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.8-ல் விமானப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டம் : 7,000 கி.மீ. சாகச பேரணிக்கு ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      இந்தியா
Indian-Air-Force 2024-03-29

Source: provided

புதுடெல்லி : இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழா அக்டோபர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, 7,000 கி.மீ., நீள கார் பேரணி நடத்தப்படுவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும் , போர்க் காலங்களில் வான்வழிப் போரை நடத்துவதும் விமானப் படையின் முதன்மைப் பணியாகும். இது அதிகாரப்பூர்வமாக, அக்டோபர் 8-ம் தேதி 1932-ம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் துணை விமானப் படையாக நிறுவப்பட்டது. 

தற்போது 92-வது ஆண்டு விழா  அக்டோபர் 8-ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி உலகின் மிக உயரமான விமானப்படை நிலையங்களில் ஒன்றான லடாக்கின் தோயிஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் வரை 7,000 கிமீ தூரம் கார் பேரணி நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 8-ம் தேதி கடல் மட்டத்திலிருந்து 3,068 மீ., உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான விமானப்படை நிலையங்களில் ஒன்றான தோய்ஸில் இருந்து கொடியேற்றப்படும். இந்த பேரணியில் மொத்தம் 52 விமான வீரர்கள், ஓட்டுநர்களாக மற்றும் இணை ஓட்டுநர்களாக கலந்து கொள்கின்றனர். 

பல பெண் அதிகாரிகள், விமானப்படையைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு இந்த பேரணியில் வாகன ஓட்டிகளாக பங்கேற்கின்றனர். இந்த பேரணி இந்தியில் வாயு வீர் விஜேதா பேரணி என்று அழைக்கப்படுகிறது.

 இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தப் பேரணியின் நோக்கம் இந்திய விமானப் படையின் புகழ்பெற்ற வரலாறு, பல்வேறு போர்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய வீரம் பற்றி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும்.

இதன் மூலம் தாய்நாட்டிற்கு சேவை செய்ய இளைஞர்களை தயார்படுத்த வேண்டும். இந்திய விமானப்படையின் சாகசப் பிரிவு இந்த பேரணியை முன்னெடுத்து நடத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து