முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதயநிதி துணை முதல்வராவதால் முன்னேற்றம் ஏதும் வரப்போவதில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      தமிழகம்
Murugan 2023 04 02

Source: provided

சென்னை : சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தூய்மை சேவை எனும் இயக்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தூய்மை பாரதம் திட்டத்துக்கான உறுதிமொழியை ஊழியர்கள் உடன் இணைந்து எடுத்துக் கொண்டார். 

இதையடுத்து,  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

நாட்டின் பிரதமராக 2014-ம் ஆண்டு   மோடி பதவியேற்றது முதல், தூய்மை இந்தியா தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தை தொழில் மையமாக கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் உள்ள காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுகம், வ.உ.சி. துறைமுகம் ஆகியவை சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.

பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கைகள் வைத்துள்ளார். இதுதொடர்பாக, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஒவ்வொரு துறைக்கும் வலியுறுத்துவார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வராகவோ,  துணை முதல்வராகவோ பதவியேற்றுக் கொண்டாலும் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் வரப்போவது கிடையாது. மது இல்லாத மாநிலமாக மாற்றப்போவது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து