முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்காம் தொகுதியில் வெற்றி: ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக பதவியேற்கிறார் உமர் அப்துல்லா

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      இந்தியா
Umar-Abdullah 2023-10-27

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். அவர் ஜம்மு-காஷ்மீர் முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ளார். 

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

இந்த தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லா பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டார். இந்நிலையில், பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா 36,010 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் அகா சையத் மண்டாஸிர் மேத்தி 17,525 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளார். அகா சையத்தை 18,485 வாக்குகள் வித்தியாசத்தில் உமர் அப்துல்லா வீழ்த்தியுள்ளார். 

ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றதையடுத்து அவரது தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் முதல்வராக மீண்டும் உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து