முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று நாடு தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டம் : டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      இந்தியா
Doctor 2024-10-08

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தா ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு தழுவிய உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப் போவதாக டாக்டர்கள் சங்கம்  அறிவித்துள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பெண் டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கொல்கத்தா ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக டாக்டர்கள் சங்கம்  அறிவித்தள்ளது.\"நாங்கள் மேற்கு வங்க ஜூனியர் டாக்டர்கள் முன்னணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம், எங்கள் நிலைப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளோம். விரிவான ஆலோசனைக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் சக ஊழியர்களுக்கு ஒற்றுமையாக நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என அனைத்திந்திய மெடிக்கல் அசோசியேசன் பெடரேசன் தலைவர் சவ்ரங்கர் தத்தா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி  கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. 

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

சுமார் 42 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர், 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து