முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா தேர்தல்: சாவித்ரி ஜிண்டால் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      இந்தியா
Savitri-Jindal 2024-10-08

Source: provided

சண்டிகார் : அரியானா சட்டசபை தேர்தலில் ஹிசார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றுள்ளார்.

அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஹிசார் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் 49,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் 30, 290 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 18,941 ஆகும். அதேபோல பாஜக வேட்பாளராக களம் கண்டுள்ள அரியானாவின் மந்திரியும் ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமல் குப்தா 17,385 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து