முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்பியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்கா - இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 2 பேருக்கு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      உலகம்
Nobel-Prize 2024-10-08

Source: provided

ஸ்டாக்ஹோம் : 2024ம் ஆண்டிற்கான  இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை (RNA) கண்டுபிடித்ததற்காக விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க் தொடர்பான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து