முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2024      தமிழகம்
India-Meteorological 2022

சென்னை, அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் (புயல் சின்னம்) உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. வானிலை மையம் கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இதனால் மிக கனமழை ஆபத்தில் இருந்து சென்னை தப்பியது.

இந்த நிலையில், அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் 22-ம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

அதைபோல மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழ்நாட்டிற்கு பெரிய மழைக்கு வாய்ப்பில்லை எனவும் அவ்வப்போது கனமழை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து