முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்சன் தயாரிப்பாளர் ஆனது எப்படி - இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2024      சினிமா
Sivabalan 2024-10-22

Source: provided

’டாடா’, ‘ஸ்டார்’ என்று தொடர் வெற்றி படங்களைத் தொடர்ந்து நடிகர் கவின், தற்போது சுமார் 5 படங்களில் நடித்து வருகிறார். இதில் மிக முக்கியமான படமாக ‘ப்ளடி பெக்கர்’ பார்க்கப்படுவதோடு, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இயக்குநர் நெல்சல் திலீப்குமார் தயாரிக்கும் முதல் படம் என்பதால்தான்..

இது  பற்றி கூறிய இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், நான் பத்து வருடங்களாக நெல்சனுடன் பயணித்து வருகிறேன். வேட்டை மன்னன் படம் கைவிட்ட பிறகு தொலைக்காட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிறகு படம் இயக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன்.

அப்போது நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை ஆரம்பித்த உடன் அவருடன் பணியாற்ற தொடங்கினேன். பிறகு மீண்டும் படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்ட போது, நெல்சனிடம் ஆலோசனைகள் கேட்பேன், அப்படி தான் இந்த படத்தின் ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவர் நன்றாக இருக்கிறது, இதை சரியான தயாரிப்பாளர் மூலம் செய்தால் பெரிதாக வரும் என்று கூறினார்.

அவருக்கு இந்த கதை மேல் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது, அதனால் தான் ஒரு கட்டத்தில் அவரே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார். மேலும் நெல்சன் தயாரித்திருப்பதால் இந்த படம் காமெடி படமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். ஒரு டிராமாவாகவும், திரில்லர் ஜானரிலும் தான் படம் இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து