முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 ஹிஸ்புல்லா அமைப்பினர் பலி

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      உலகம்
Gaza 2024-10-23

காசா, தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹெஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. 

அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. 

தெற்கு லெபனானில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தரை மற்றும் வான்வழி தாக்குதல்களில் தோராயமாக 70 ஹிஸ்புல்லா போராளிகளை அழித்தனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப்படை டெலிகிராமில் தெரிவித்துள்ளது. 

மேலும், ராக்கெட்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட ஹிஸ்புல்லா ஆயுத களஞ்சியங்களை இஸ்ரேலிய வீரர்கள் அழித்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து