முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : விமானங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாக கேட்ட தகவல்களை தராத டுவிட்டர்  சமூக வலைதளத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன் நடவடிக்கைகள் குற்றத்திற்கு துணை போவது போல் அமைவதாக கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சமூக வலைதளங்கள் மூலம் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. இதனையடுத்து, பல விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்படுவதுடன், சில விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படுகின்றன. 

இதனால், விமான நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் 8 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அப்போது, மிரட்டல் வந்த சில டுவிட்டர்  வலைதள கணக்குகளை கண்டறிந்தனர். 

அந்த கணக்கின் உரிமையாளர் மற்றும் ஐ.பி., முகவரி உள்ளிட்ட தகவல்களை தருமாறு அந்த நிறுவனத்திடம் போலீசார் கேட்டனர். ஆனால், அந்த தகவல்களை தர அந்த நிறுவனம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சமூக வலைதள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை நடத்தினர். 

அப்போது போலீசார் கேட்ட தகவல்களை தராத டுவிட்டர் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அதன் செயல்பாடுகள் குற்றத்திற்கு துணை போவது போல் அமைந்துள்ளது எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து