முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      இந்தியா
Kerala 2024-10-23

பாலக்காடு, பாலக்காடு அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள். 

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து வந்த கார், பாலக்காடு - கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அய்யப்பன்காவு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தை அடுத்து கார் லாரியின் அடியில் சிக்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாலக்காடு மாவட்ட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசாரின் தகவல்படி, உயிரிழந்தவர்கள்  விஜேஷ் (35), ரமேஷ் (31), விஷ்ணு (30), மற்றும் முகமது அப்சல் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் அடையாளம் இன்னும் காணப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து