முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டானா புயல் எச்சரிக்கை: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      தமிழகம்
Payal storm 2023-10-22

சென்னை, டானா புயல் உருவானதையடுத்து தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகியுள்ளது . இந்த புயலுக்கு 'டானா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசாவின் பூரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். புயலை எதிர்கொள்ள மேற்கு வங்காள அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புயலால் பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகிற்து. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "நேற்று முன்தினம் கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 'டானா' புயலாக வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது உருவாகி உள்ள 'டானா புயல்' தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் டானா புயல் உருவாகி உள்ள சூழலில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து