முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2024      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பெருமிதம்  தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அனைத்து அலுவலர்களும் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (23.10.2024) முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 4.73 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 53.94 லட்சம் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 7.5.2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 95,109 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களை பரிசோதிப்பதற்காக தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதார துறையுடன் ஒருங்கிணைந்து 388 வட்டாரங்களிலும் 10,969 சுய உதவிக் குழு மகளிருக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய சுய உதவிக்குழு மகளிரின் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்களை அதிக அளவில் சந்தை படுத்துவதற்காக www.mathisandhai.com என்ற மதி சந்தை விற்பனை இணைய தளம் தொடங்கப்பட்டு 18.11.2023 அன்று முதல் செயல்பட்டு வருகின்றது. மேலும் முன்னணி மின்னணு வர்த்தக சேவை நிறுவனங்களான அமேசான், பிளிப்காட், மீசோ, பூம், ஜெம், இந்தியாமார்ட், டிரேட் இந்தியா மற்றும் பூஸ்ட் 360 ஆகியவற்றில் சுமார் 1,039 மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 36 ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 92,016 ஊரக இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டதுடன், 50,841 இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு, சுய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 490 இளைஞர் திறன் திருவிழாக்கள் மூலம் 40,214 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு அரசு திறன் திட்டங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மையம் மற்றும் புதிய தொழில் உருவாக்க மையம் திட்டங்கள் உள்பட அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களினால் ஏற்பட்ட விளைவுகளால் பணிக்கு செல்லும் மகளிர் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலாவதாக தமிழ்நாடு திகழ்கின்றது. பெண்கள் மேலும் உயர்ந்த நிலையை அடைய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அனைத்து அலுவலர்களும் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து