முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலுக்கு உதவியா? - எகிப்து ராணுவம் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      உலகம்
Egyptian-Army 2024-11-01

Source: provided

கெய்ரோ : இஸ்ரேலுக்கு உதவுவதாக வெளியான தகவலுக்கு எகிப்து ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக எகிப்து ராணுவம் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேலின் ஆயுத தொழிற்சாலைக்கு தேவையான சுமார் 1,50,000 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட 8 கண்டெய்னர்களுடன் எம்.பி.கேத்ரின் என்ற ஜெர்மன் கப்பல் எகிப்தின் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்திற்கு வந்ததாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது எகிப்து ராணுவத்தின் கவனத்திற்கு வர, உடனடியாக அந்த தகவலை மறுத்துள்ளது. இஸ்ரேலுடன் எந்த விதமான ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. முன்னதாக உயர்மட்ட ஆதாரத்தை மேற்கோள் காட்டி, எகிப்ரின் பத்திரிகை மையமும் அந்த தகவலை நிராகரித்தது.

பாலஸ்தீன மக்களுக்கு எகிப்து அளிக்கும் ஆதரவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு எதிரான நபர்களால் இதுபோன்ற செய்திகள் பரப்பப்பட்டதாக பத்திரிகை மையம் கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து