முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ஒருமனதாக தேர்வு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
Abdul-Rahim 2024-11-04

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

ஜம்மு - காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, சட்டசபை சபாநாயகர் பதவிக்கு தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், சரார்-இ-ஷரீப்பின் 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம் ராதர் பெயரை விவசாயத்துறை அமைச்சர் ஜாவத் அஹ்மத் தார் முன்மொழிந்தார். 

எதிர்க்கட்சியான பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் நிறுத்தப்படாத நிலையில், அப்துல் ரஹீம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, முதல்வர்  உமர் அப்துல்லாவும் எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவும் அவரை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். 

அதன் பின்னர் பேசிய உமர் அப்துல்லா, ஒட்டுமொத்த சபையின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். முன்னதாக, ஜம்மு காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் பதவி வகித்துள்ளார். மேலும் 2002 முதல் 2008 வரை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று யூனியன் பிரதேசத்தின் முதல் அரசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து