முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் : 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார் சந்திரபாபு நாயுடு

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
Vijayawada-Sreesailam 2024-

Source: provided

திருப்பதி : ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதல்வர்  சந்திரபாபு நாயுடு வருகிற 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், மாநில விமான நிலைய மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த கடல் விமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. 

கிருஷ்ணா நதியில் பாதாள கங்கா படகு முனையத்தில் இருந்து கடல் விமான போக்குவரத்து தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கடல் விமானத்தில் 14 பேர் பயணம் செய்யலாம். விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சாமி கோவிலில் இருந்து ஸ்ரீசைலம் மல்லன்னா கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கடல் விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வருகிற 9-ம் தேதி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் மேலும் சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளனர். விசாகப்பட்டினம்-நாகார்ஜுன சாகர் , கோதாவரி உள்ளிட்ட இடங்களிலும் கடல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து