முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      உலகம்
EarthQuake-2023-04-03

பீஜிங், கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகே நேற்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

10 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் முதலில் 5.25 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.50 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து