முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில முறைகேடு வழக்கு: லோக்அயுக்தா போலீசார் முன்பு ஆஜரானார் சித்தராமையா

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      இந்தியா
Siddaramaiah 2023 04 16

Source: provided

மைசூரு : நில முறைகேடு வழக்கு தொடர்பாக மைசூரு லோக்அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று நேரில் ஆஜரானார்.

கர்நாடகத்தில் சித்தராமையா (76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர்  சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மூடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்  இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில கவர்னரிடம் மனு அளித்தனர். இந்த விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். 

இருப்பினும், விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு, விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. இந்த வழக்கை லோக் அயுக்தா போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே முடா நிலமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (6-ம் தேதி) விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா நேற்று மைசூரு லோக்அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் நேரில் ஆஜரானார். இதற்காக அவர் நேற்று காலை 7.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக மைசூரு சென்றார். அவரிடம் விசாரணை நடத்த தேவையான முன்னேற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். 

சித்தராமையா விசாரணைக்கு ஆஜரானதை தொடர்ந்து லோக்அயுக்தா அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து