முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடக்கிற்கும் தெற்குதான் வாரி வழங்குகிறது: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-11-06

Source: provided

கோவையில் ரூ. 300 கோடியில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, சிறந்த மாநிலமாக உள்ளது. இப்போது, தெற்கு தான் வடக்கிற்கும் வாரி வழங்குகிறது என்று தெரிவித்தார். 

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கோவை காந்திபுரத்தில் உள்ள அனுப்பர்பாளையம் கிராமத்தில்  தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: 

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறேன். கோவைக்கு இதுவரை 3 முறை வந்து, பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டு திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன்.

கடந்த 3 ஆண்டுகளில் அறிவித்த அறிவிப்புகளின் நிலை குறித்து அமைச்சர்களை ஆய்வு செய்யச் செல்ல அறிவித்து, முதலீடுகள் ஈர்ப்புக்காக அமெரிக்கா சென்றேன். அங்கிருந்து வந்த பின்பு அமைச்சர்களிடம் திட்டங்களின் நிலை குறித்து கேட்டதோடு, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை கோவையில் இருந்து துவங்கியுள்ளேன்.

கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. தடையெல்லாம் தகர்த்து வந்துள்ளார் செந்தில் பாலாஜி. கோவையில் நூலகத்தோடு சேர்ந்து அறிவியல் மையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. கோவையில் தந்தை பெரியார் பெயரில் இந்நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல கோவையில் இந்த பெரியார் நூலகம் உருவாகவுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி, 2026-ல் நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதியான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப மையமாக கோவை உள்ளது. கோவை எல்காட் வளாகத்தில் 17.17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு ஐ.டி. பூங்கா அமைக்கப்படும். இதனால் 31 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

சின்னியம்பாளையம் முதல் நீலாம்பர் வரை 5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை நீட்டிக்கப்படும். தொண்டாமுத்தூரில் யானை புகாத வகையில் நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும். ஆனைமலை கூட்டு குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். 295 பொள்ளாச்சி கிராமங்களுக்காக கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.

கோவை மாநகரில் புனரமைக்கப்படாத சாலைகள், பாதாளச் சாக்கடையால் பாதிப்படைந்த சாலைகள், மண் சாலைகள் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, மக்களுக்கான பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, சிறந்த மாநிலமாக உள்ளது. இப்போது, தெற்கு தான் வடக்கிற்கும் வாரி வழங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து