முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி பலி

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      உலகம்
Lebanon 2024-11-06

ஜெருசலேம், கியாம் பிராந்தியத்தில் ஹிஸ்புல்லா மூத்த கமாண்டர் ஹுசைன் அப்துல் ஹலீம் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கம் களமிறங்கி உள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவருக்கு அடுத்து தலைமை பதவிக்கு வரவிருந்த தலைவரும் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்று லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு லெபனானில் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும், இதில் கியாம் பிராந்தியத்தில் ஹிஸ்புல்லா மூத்த கமாண்டர் ஹுசைன் அப்துல் ஹலீம் ஹர்ப் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. கொல்லப்பட்ட ஹர்ப், இஸ்ரேலின் கலிலேயா பகுதியில் குடியிருப்புகளை குறிவைத்து பல ராக்கெட் தாக்குதல்களை நடத்தியவர் என்றும் ராணுவம் கூறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து