முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மேயர் தேர்தல்: 3 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வெற்றி

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      இந்தியா
Delhi-Mayor 2024-11-15

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் நேற்று நடந்த மேயர்  பதவிக்கான தேர்தலில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி  வெற்றி பெற்றுள்ளார்.

நடப்பு ஆண்டில் டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி நடக்கவிருந்தது.  இந்த மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கு ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் ஏப்ரல் 13-ம் தேதியே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  எனினும், பல்வேறு காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள முனிசிபல் மாநகராட்சி கட்டிடத்தில் மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  இந்த தேர்தலில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளராக மகேஷ் குமார் கிச்சி (தேவ் நகர் வார்டு) போட்டியிட்டார்.  பா.ஜ.க. வேட்பாளராக கிஷன் லால் (ஷகுர்பூர் வார்டு) போட்டியிட்டார்.  

தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளிவந்துள்ள நிலையில்  மொத்தமுள்ள 265 வாக்குகளில், மகேஷ் குமார் கிச்சி 133 வாக்குகளை பெற்றார்.  பா.ஜ.க. வேட்பாளர் கிஷன் லால் 130 வாக்குகள் பெற்றார்.  2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.  இதனால், 3 வாக்குகள் வித்தியாசத்தில் மகேஷ் குமார் கிச்சி  வெற்றி பெற்றுள்ளார்.  டெல்லி நகரின் தூய்மைக்காக பணியாற்றுவதே என்னுடைய முன்னுரிமை என வெற்றி பெற்ற மகேஷ் குமார் கிச்சி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து