முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அபார வெற்றி

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      விளையாட்டு
14-Ram-58-2

Source: provided

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தொடங்கியது. 

இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இலங்கை அணி 49.2 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதன் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து டி. எல்.எஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ரன்கள் அடிக்க வேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கபப்ட்டது. தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது இன்னிங்சை விளையாடியது. தொடக்கம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . இதனால் நியூசிலாந்து அணி 27 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது . அதிகபட்சமாக வில் யங் 48 ரன்கள் எடுத்தார் . இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . இந்த வெற்றியால் ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது . 

300* ரன்கள் விளாசிய மஹிபால் 

ரஞ்சிக் கோப்பையில் உத்தரகண்ட் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இடதுகை ஆட்டக்காரர் மஹிபால் லோம்ரோர் 360 பந்துகளில் 300* ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திடல்களில் நடைபெற்றுவருகின்றன. இதில், ராஜஸ்தான் - உத்தரகண்ட் அணிகள் மோதும் போட்டி டேராடூனில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற உத்தரகண்ட் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியில் 3-வது வரிசையில் களமிறங்கிய 24 வயதான மஹிபால் லோம்ரோர் 360 பந்துகளில் 25 பவுண்டரிகள், 13 சிக்ஸர்களுடன் 300* ரன்கள் குவித்தவுடன் ராஜஸ்தான் கேப்டன் தீபக் ஹூடா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். 300 ரன்கள் குவித்த மஹிபால் லோம்ரோர் இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 133 ரன்கள் அடித்துள்ளார். 

சாம்சனின் தந்தை குற்றச்சாட்டு

சஞ்சு சாம்சனின் தந்தையான விஸ்வநாத் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் அவர் தனது மகனின் 10 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையை முன்னாள் கேப்டன்களான தோனி, விராட் மற்றும் ரோகித் ஆகியோர் வீணடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், " இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் எனது மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள். மேலும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்காமல் முன்னாள் பயிற்சியாளர் டிராவிட்டும் எனது மகனின் கெரியரை வீணடித்து விட்டார். ஆனால் அவர்கள் எவ்வளவு காயப்படுத்தினாலும், எனது மகன் சிக்கலை எதிர்கொண்டு சாதித்திருக்கிறார்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து