முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருதரப்பு தொடர்களில் அதிக விக்கெட்டுகள்: வருண் சக்ரவர்த்தி சாதனை

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2024      விளையாட்டு
14-Ram-51

Source: provided

செஞ்சூரியன்: இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

திலக் வர்மா சதம்...

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா (107 ரன்கள்) சதமடித்து அசத்தினார். பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதிக விக்கெட்டுகள்.. 

முன்னதாக இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளையும் சேர்த்து வருண் சக்ரவர்த்தி நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகள் அறுவடை செய்துள்ளார். இதன் மூலம் இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் வருமாறு.,1. வருண் சக்ரவர்த்தி - 10 விக்கெட்டுகள்.

2. அஸ்வின்/ பிஷ்னோய் - 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து