முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக்குறைக்க தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      இந்தியா
Revanth-Reddy 2023-12-05

ஐதராபாத், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

தெலங்கானாவில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு குழந்தைகள் பங்கேற்ற மாதிரி சட்டப்பேரவை நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக எஸ்சிஇஆர்டி வளாகத்தில் போலி சட்டப்பேரவை அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மாதிரி பேரவையில் மாணவர்களிடையே உரையாற்றிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, சட்டப்பேரவை செயல்பாட்டில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் குறித்த முக்கியத்துவத்தையும் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் குறித்த விளக்கத்தையும் அளித்தார். சட்டப்பேரவை அமர்வு ஒழுங்காகவும் பயனுள்ளதாகவும் இருப்பதில் பேரவைத் தலைவரின் பங்கு முக்கியமானது என்றார்.

வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வயதைக் குறைக்க வேண்டும். அதன்படி தற்போதுள்ள 25 வயதிலிருந்து அதனை 21 ஆகக் குறைக்க வேண்டும், இது ஆட்சி நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்களிப்புக்கு உதவும் என்றார். மேலும் குழந்தைகள் மாதிரி பேரவையை உருவாக்கிய அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இது இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என்றார்.

இறுதியாக, மாணவர்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய முதல்வர், அரசியல் விழிப்புணர்வும் ஈடுபாடும் கொண்ட தலைமுறையை உருவாக்க இதுபோன்ற திட்டங்கள் உதவுவதாகக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து