முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3வது டி-20 போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

செயிண்ட் லூசியா : 3-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

சுற்றுப்பயணம்... 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோவ்மன் பவல் 54 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

4-வது போட்டி... 

தொடர்ந்து 146 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 41 ரன் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி இன்று நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து