முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் தாக்கரேவின் 12-வது நினைவு நாள்: முன்னாள் முதல்வர் உத்தவ், அரசியல் தலைவர்கள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      இந்தியா
Uddhav-Thackeray 2024-11-17

Source: provided

மும்பை : சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் 12வது நினைவு நாளையொட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் சிவசேனை (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தாக்கரே ஆகியோர் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இரண்டு போட்டி சேனை பிரிவுகளைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் பால் தாக்கரேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவிடத்திற்குச் சென்றனர்.

இவைதவிர, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் சிவசேனை (யுபிடி) தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தங்களது எக்ஸ் தளத்தில் அஞ்சலி செலுத்தினர். சிவசேனை நிறுவனரும் உத்தவ் தாக்கரேவின் தந்தையுமான பால் தாக்கரே கடந்த 2012, நவம்பர் 12ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லமான 'மாதோஸ்ரீ'யில் காலமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து