முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டமன்ற தேர்தல்: 12 பேர் அடங்கிய தேர்தல் குழுவை அமைத்த பா.ஜ.க.

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      இந்தியா
Delhi-BJP 2024-11-17

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் அடுத்த ஆண்டு(2025) துவக்கத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவை பா.ஜ., அமைத்தது.

டெல்லி பா.ஜ., தலைவர் விரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியின் தெற்கு பா.ஜ., தலைவர் ராம்விர் சிங் பிதுாரி தலைமையில், ஹர்ஷ்வர்தன், அர்விந்தர் சிங் லவ்லி, விஜய் கோயல், சதிஷ் உபியாய், மீனாக்ஷி லெகி, பரவேஷ் சஹிப் சிங், அஜய் மஹாவர், பிரவீன் ஷங்கர் கபூர், அபிஷேக் டான்டன், ராஜ்குமார் புல்வாரியா மற்றும் நீட்டு தபாஸ் ஆகிய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜ., உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகையில்,

வரவுள்ள சட்டமன்ற தேர்தல் அடித்தள வேலைகள் முழுமையடைந்து விட்டது. இம்மாத இறுதியில் சிறுசிறு பணிகளை முடிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டோம். களப்பணிகளை முழு அர்ப்பணிப்போடு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்.இப்பணிகள் குறித்து, டெல்லி பா.ஜ., தலைவர் சச்தேவா, டெல்லியில் உள்ள 7 எம்.பி.க்களுடனும் டெல்லி பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பண்டா உடன் பேசப்பட்டுவிட்டது. விரைவில் பா.ஜ.,உயர்மட்ட கூட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து