எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மதுக்கடைகளை மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை, குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிந்த பிறகும் கடைகளை காலி செய்யாமல் நடத்தப்படுகிறது என்ற அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் சதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதையடுத்து, 2019-ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த போதும், கடையை காலி செய்யாதது ஏன் எனவும், இதை கேள்வி கேட்டால் காவல் துறையினரை வைத்து வழக்கு தொடர்வீர்களா எனவும், ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்களுக்கு எதிராக செயல்படும் டாஸ்மாக் நிர்வாகம், சொந்த வருமானத்தை மட்டுமே பார்ப்பதாகவும், இதுபோல் மீண்டும் புகார் வந்தால் நீதிமன்றம் தீவிரமாக கருதும் எனவும் எச்சரித்த நீதிபதி, கடை வேண்டாம் என மக்கள் கூறினால், போலீசாரை வைத்து கடைகளை நடத்துவீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.அரசு நிலம் என்றால் சட்டத்தை பயன்படுத்தும் போது, தனிநபர்களுக்கு சட்டம் இல்லையா எனக் கேட்ட நீதிபதி, சட்டத்தை அரசு கையில் எடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
பின்னர், சுந்தருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி ரத்து செய்த நீதிபதி, குத்தகை காலம் முடிந்தால், கடையை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படியும், டாஸ்மாக் கடை வேண்டாம் என மக்கள் கூறினால், அந்த கடைகளை மாற்ற வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-11-2024.
19 Nov 2024 -
2025 அக்டோபரில் வெளியாகும் காந்தாரா அத்தியாயம்-1
19 Nov 2024சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான காந்தாரா அத்தியாயம் 1 அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
-
நயன்தாரா ஆவணப்பட விமர்சனம்
19 Nov 2024டயானா மரியம் குரியன் நயன்தாராவாக மாறி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயர்ந்த இடத்தை அடைந்தது எப்படி என்பதுதான் இந்த ஆவணப்படம்.
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை
19 Nov 2024சென்னை, தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
-
இந்தி மொழியில் மட்டுமே இயங்கிய எல்.ஐ.சி இணையதளம்: பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
19 Nov 2024சென்னை, எல்.ஐ.சி இணையதளம் இந்தி மொழியில் மட்டுமே இயங்கிய நிலையில், பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த
-
சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் பயணி உடல் கண்டெடுப்பு
19 Nov 2024சென்னை, சென்னை வந்த சர்வதேச விமானத்தில் பெண் பயணி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு மாரடைப்பால் பெண் பயணி இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
2 பேரை தாக்கி கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு
19 Nov 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல்: சிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற தடை விதித்தது ஐகோர்ட்
19 Nov 2024சென்னை, அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 23-ம் தேதி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Nov 2024சென்னை, வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு
19 Nov 2024புதுடெல்லி, பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு சுப்ரீம்கோர்ட் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
-
எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது: பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு வழங்க உயர் நீதிமன்றம் தடை
19 Nov 2024சென்னை, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
-
எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
19 Nov 2024சென்னை, எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க. பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாட்கள் நீடிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
19 Nov 2024சென்னை, இந்தி மொழியில் மட்டும் எல்.ஐ.சி இணையதளம் இயங்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என்று அ
-
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது
19 Nov 2024திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பாக்.கில் பாதுகாப்புப்படையினரால் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Nov 2024லாகூர், பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
-
ஜி-20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் மோடி
19 Nov 2024பிரேசிலா, ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
சூடானில் நிலவும் குழப்பம்: 150 துணை ராணுவப்படையினர் பலி
19 Nov 2024கார்டூம், சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ராணுவத்தால், துணை ராணுவப்படையை சேர்ந்த 150 பேர் கொல்லப்பட்டனர்.
-
ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு
19 Nov 2024சென்னை, ஜாபர் சாதிக் வழக்கில் வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி
19 Nov 2024காந்திநகர், குஜராத்தில் தனியார் வேன் லாரி மீது மோதிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடைபெற்று வரும் போர்களால் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்: ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
19 Nov 2024பிரேசிலா, நடைபெற்று வரும் போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்: அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழப்பு
19 Nov 2024சேலம், அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
19 Nov 2024நாக்பூர், காரில் சென்றபோது மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது மர்மநபர்கள் கல்வீசியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நவம்பர் 24-ல் பாராளுமன்ற அனைத்துக்கட்சிகள் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு
19 Nov 2024புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்க தேவஸ்தானம் முடிவு
19 Nov 2024திருப்பதி, திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுவதாக கூறப்படும் நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதா
-
இலங்கை அதிபர் திசநாயகா டிசம்பரில் இந்தியா வருகிறார்
19 Nov 2024கொழும்பு, இலங்கை அதிபர் அனுர குமார திஸநாயகா அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.