முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்க தேவஸ்தானம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுவதாக கூறப்படும் நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. உலக புகழ்பெற்ற இந்தக் கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் , தலைவர் பி.ஆர் நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்து அல்லாத பிற மத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் நாயுடு, திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை மாற்ற முடிவு செய்து இருக்கிறோம். ஆந்திர அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்" என்றார். 2018 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின் படி, திருப்பதி கோவிலில் 44 பிற மத ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து