முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நவம்பர் 24-ல் பாராளுமன்ற அனைத்துக்கட்சிகள் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ல் தொடங்குகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி 24ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும்நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நவ.26-ம் தேதி பாராளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று தெரிவித்திருந்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து