முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      இந்தியா
Anil-Deshmukh 2024-11-19

நாக்பூர், காரில் சென்றபோது மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது மர்மநபர்கள் கல்வீசியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் நேற்று நாக்பூர் மாவட்டம் நார்கேட் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டதில் கலந்துகொண்டு விட்டு கடோலுக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.

இரவு 8 மணி அளவில் கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் உள்ள பெல்பாட்டா அருகே வந்தபோது, அனில் தேஷ்முக்கின் காரின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அனில் தேஷ்முக்கின் தலைப்பகுதியில் கற்கள் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து