முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைகேடு புகார்: பிரபல தொழிலதிபர்: அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்குப்பதிவு

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2024      உலகம்
Adani 2024-01-05

நியூயார்க், சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பாக  இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக  பிரபல தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பாக  இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து,  அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து நியூயார்க் பெடரல் கோர்ட்டில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது.அதானியின் உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீதும் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. இதே புகாரில் அமெரிக்கா பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த குற்றச்சாட்டு குறித்து அதானியோ, இந்திய தூதரகமோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.  முன்னதாக, அதானி குழுமம், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் நிறுவன பங்குகளை போலியாக அதிகரிக்க செய்வதாக அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்குள்ளானது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து