முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெதன்யாகு எங்கள் நாட்டுக்கு வந்தால் கைது செய்வோம் : இங்கிலாந்து அறிவிப்பு

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      உலகம்
Netanyahu-(Israeli)

Source: provided

லண்டன் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன் வைக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து பிரதமர்  கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, 

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து போலீசார் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும். நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம் என்றார். 

இதன் மூலம் நெதன்யாகு இங்கிலாந்து வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து மறைமுகமாக தெரிவித்துள்ளது. அதே போல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டுக்கு இணங்கப் போவதாக தெரிவித்து உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து