முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Cong 2024-06-19

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.

ஜார்கண்ட் மற்றும் மராட்டியம் ஆகிய 2 மாநில சட்டசபை தேர்தலுடன் உத்தரபிரதேசம், அசாம், பீகார், குஜராத், கர்நாடகம், வயநாடு, மத்திய பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.  இந்நிலையில், கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.

சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சி.பி. யோகேஷ்வர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார். சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. துக்காராம் மனைவி அன்னபூர்ணா பா.ஜ.க.வின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்துள்ளார்.

அதே போல, ஷிக்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமதுகான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. எம்.பி. பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து