முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிரா தேர்தல் முடிவில் ஏதோ பெரிய சதி இருக்கிறது : சஞ்சய் ராவத் பேட்டி

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      இந்தியா
Sanjay-Rawat 2023 04 09

Source: provided

மும்பை : மகராஷ்டிர தேர்தல் முடிவுகள் மக்களின் ஆணையை பிரதிபலிக்கவில்லை. இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) ஆகியவை அடங்கிய மகா விகாஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.   இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம்  அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறியதாவது, 

இது மகராஷ்டிரா மக்களின் முடிவாக இருக்க முடியாது. மகராஷ்டிரா மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.  நாம் பார்க்கும் பார்வையில் ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. இது பொதுமக்களின் முடிவு அல்ல. இங்கு என்ன தவறு என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். 

தேர்தலில் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.  ஏதோ சதி நடந்துள்ளது. எங்கள் தொகுதிகளில் சிலவற்றை திருடி விட்டார்கள். இது பொதுமக்களின் முடிவாக இருக்க முடியாது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை.

ஒவ்வொரு தொகுதியிலும் பணம் எண்ணும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷிண்டேவுக்கு 60 இடங்களும், அஜித் பவாருக்கு 40 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 125 இடங்களும் கிடைக்குமா? இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை பா.ஜ.க. திட்டவட்டமாக மறுத்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் பிரவின் தரேகர், 

சஞ்சய் ராவத் தனது விமானத்தை தரையிறக்க வேண்டும். மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க. ஆட்சி இருக்கும்போது மகராஷ்டிரா மேலும் முன்னேறும். பொதுமக்களின் முடிவுக்கு இதுவே காரணம். மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவார் என நினைக்கிறேன்  என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து