எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், டெல்டா மாவட்டஙகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று (நவ.26) மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு பெங்கால் எனப் பெயரிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் பெயர் சவுதி அரேபியா வழங்கியதாகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., “தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நேற்று (நவ.26) காலை 8.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு பெங்கல் என பெயரிடப்படும். இது சவுதி அரேபியா பரிந்துரைத்த பெயர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், திங்கள்கிழமை இரவு முதலே தமிழக கடலோர மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டஙகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 13 hours ago |
-
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.