முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கைது

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
Chidambaram 2024-11-26

Source: provided

 

கடலூர்: சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பா.ம.க.வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிதம்பரத்தில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று (நவ.26) காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி,பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஏராளமான பா.ம.க.வினர் குவிந்தனர். போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று பா.ம.க. நிர்வாகிகளிடம் கூறினர். 

ஆனாலும் பா.ம.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பத்து பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அப்பொழுது பா.ம.க.வினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் சிதம்பரம் காந்தி சிலை பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து