எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இதே போல நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் ராமநாதபுரத்தில் (பகுதி அளவில்) மழை நீடிக்கும். புதுச்சேரி மற்றும் கடலூரிலும் கனமழை பொழியும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி தொடங்கியே பரவலாக மழைப்பொழிவு இருக்கிறது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இலங்கைக்கு கீழே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் நகர்வு மிகவும் நிதானமாக இருக்கின்ற காரணத்தாலும், தமிழக கடலோர பகுதியை ஒட்டி இருப்பதாலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மழை இருக்கும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை டிசம்பர் 1-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு அருகில் கரையை கடந்தால் இந்தப் பகுதிகளில் கனமழை பதிவாகும். இந்த மழை மூலம் சென்னையின் நீர் ஆதாரங்கள் பெறுகின்ற மழை நீர் 2025-ம் ஆண்டை சமாளிக்க உதவும். நீர்ப்பிடிப்பு பகுதிகளான பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இப்போதைக்கு தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் மழை பொழிவு இருக்காது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பொழியும். காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்த பிறகே உட்புற மாவட்டங்களில் மழை இருக்கக்கூடும். தென் தமிழகத்தில் ராமநாதபுரம் வரை மழை இருக்கக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வேகமாக காற்று வீசும் அபாயம் இல்லை. மழை பொழிவு அதிகம் இருக்கும் என்பதே அச்சுறுத்தல். எப்போதும் போல இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையை கடக்காது. இருப்பினும் வடக்கு மற்றும் வடகிழக்கு இலங்கையில் மழை பொழிவு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
-
பராரி விமர்சனம்
26 Nov 2024திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.