முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
Muruganantham 2024-11-26

Source: provided

 

சென்னை: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை காரணமாக மருத்துவத்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெற்றது. 

இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார். மருத்துவத்துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து