முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மோசமான வானிலை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த பத்து விமானங்கள்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
Air

Source: provided

 

சென்னை: சென்னையில் மோசமான வானிலை காரணமாக விமானநிலையத்தில் தரையிறங்க முடியாமல் பத்து விமானங்கள் வானில் வட்டமடித்த நிகழ்வு நடந்துள்ளது.

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் விமானங்கள் வட்டமடித்து வருகின்றன. கொல்கத்தா, மும்பை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பல இடங்களில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தன. 

இதேபோல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 75 பயணிகளுடன் மதுரை நோக்கி இண்டிகோ விமானம் நேற்று காலை வந்தது. அப்போது மோசமான வானிலை நிலவியதன் காரணமாக விமானத்தால் மதுரையில் தரையிறங்க முடியவில்லை. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. வானிலை சீராகாத நிலையில் விமானம் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என்று கூறப்படுகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து