முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியரின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
School-Of-Education-Department 2024-11-26

Source: provided

சென்னை: பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, பணிநீக்கம், பணிரத்து போன்ற தண்டனையோடு, அவர்களது கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தண்டனை, கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம், பணிரத்து மற்றும் அவர்களின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்ய பரிந்துரை செய்வது போன்ற நடவடிக்கைகளையும் தொடர வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பள்ளிகல் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு வழிமுறைகள் குறித்து காலை வழிபாட்டுக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும், மாணவர்கள் புகார் அளிக்க பெட்டி, 14417 மற்றும் 10980 ஆகிய தொடர்பு எண்கள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான விடியோக்களை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்சிசி, ஜேஆர்சி, சாரண சாரணியர் இயக்கம் போன்றவையும் செயல்படும் பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து