முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரனுக்கு ரூ.960 குறைவு: தொடர்ந்து 2-வது நாளாக குறைந்தது தங்கம் விலை

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

 

சென்னை: தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை குறைந்தது. நேற்று சவரனுக்கு ரூ.960 குறைந்து விற்பனையானது.

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது. 

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை 2-வது நாளாக அதிரடியாக குறைந்து விற்பனையானது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080-க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 விலை குறைந்து ரூ.98-க்கு விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் ரூ1,760 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து