முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      உலகம்
Drone 2023 06 12

கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ. 25) நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கட்டடங்கள் உள்பட முக்கிய உள்கட்டமைப்புகள் பல சேதமடைந்துள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், ரஷியாவிலிருந்து சுமார் 188 டிரோன்கள் ஏவப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரமாவது நாளைக் கடந்துள்ள உக்ரைன் போரில், ரஷியாவுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷ்யாவரவழைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா வழங்கியிருந்த அதிநவீன ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாமீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், உக்ரைனின் நீப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் ரஷ்யாகண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) வகையைச் சேர்ந்த ஏவுகணைக் கொண்டு தாக்கியது. தாங்கள் உருவாக்கியுள்ள ஆரேஷ்னிக் என்ற அதிநவீன புதிய ரக ஏவுகணைகள் உக்ரைன் மீது வீசப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார். போர் நிறுத்தம் ஏற்படாமல் உக்ரைனில் சண்டை தொடருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து