முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருகம்பாக்கம் கால்வாய் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-11-02

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து 770 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்த நிலையில் , சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பாதிப்பு விவரங்களையும் அவர் கேட்டறிந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து