முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்டர்-கவாஸ்கர் டிராபி; தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் கவுதம் காம்பீர்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

மெல்போர்ன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் நாடு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபார வெற்றி...

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு (பிங்க் பால்) டெஸ்ட் போட்டியாகும்.

கான்பெர்ராவில்... 

இதற்கு முன்னதாக இரண்டு நாட்கள் கொண்ட பிங்க் பால் பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா விளையாடுகிறது. இந்த போட்டி வருகிற 30-ம் தேதி கான்பெர்ராவில் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் அவசரமாக இந்தியா திரும்புகிறார். குடும்பம் தொடர்பான தனிப்பட்ட எமர்ஜென்சி காரணமாக நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிங்க் பால் போட்டி...

இதனால் நவம்பர் 30-ந்தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தின்போது அவர் அணியுடன் இருக்கமாட்டார். அதேவேளையில் டிசம்பர் 6-நம் தேதி தொடங்க இருக்கும் பிங்க் பால் போட்டியின்போது அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா புறப்பட்டுள்ளார். இந்திய அணி புதன்கிழமை கான்பெர்ரா புறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து