முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை, புயல் எச்சரிக்கை: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      தமிழகம்
Anna-University 1

Source: provided

திருச்சி : கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட கூடிய கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சுற்றறிக்கை வழியே தகவல் அனுப்பியிருக்கிறார். இதனை தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கடலூரில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பருவ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. கனமழை மற்றும் பெங்கல் புயல் எதிரொலியாக, தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து