முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2024      இந்தியா
Parliament-1

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் அரியானா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற, பாராளுமன்ற மாநிலங்களவைக்கான 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இவற்றில் ஆந்திர பிரதேசத்தில், வெங்கடரமணா ராவ் மொபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் ரியாகா கிருஷ்ணையா ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்டில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இதனால், அந்த 3 இடங்களும் காலியாக உள்ளன. இதில், யாதவ் மற்றும் கிருஷ்ணையா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பதவி காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியுடன் முடிவடைகிறது. மொபிதேவியின் பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி முடிகிறது.

ஒடிசாவில், பிஜு ஜனதா தள கட்சியில் இருந்து சுஜீத் குமார் வெளியேற்றப்பட்டதும் அந்த இடம் காலியாக உள்ளது. அவருடைய பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோன்று, மேற்கு வங்காளத்தில் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், அதனை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த ஜவகர் சர்கார் கடந்த செப்டம்பரில், எம்.பி. பதவியில் இருந்து விலகினார்.

அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார். இதனால், அந்த இடம் காலியாக இருக்கின்றது. இந்த சூழலில், காலியாக இருக்கின்ற இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒடிசாவில் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கை ஓங்கியிருக்கிறது. மேற்கு வங்காளத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து