முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை,  புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு ரூ. 25 லட்சம்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

 புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த  விமலா (28) க/பெ. மணிகண்டன் என்பவர் நேற்று காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், பள்ளத்துப்பட்டியிலிருந்து பணி நிமித்தமாக புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பெண் காவலர்  விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். 

 பெண் காவலர்  விமலாவின்  உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.  விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து